பணம் வந்து குவிந்தவுடன் எல்லா ஆபாசங்களும் மறைந்து ஒருவர் நல்லவர் ஆகிவிடுகிறார். அதுதான் நமது உலக நியதி.
கல்லுப்பட்டியில் சேடபட்டி முத்தையாவை (முன்னாள் சட்டமன்ற சபாநாயகர்) அவரது முகத்திற்கு ‘எதிராகவே தூங்குமூஞ்சிப் பய.. இவனெல்லாம் எம்.ஜி.ஆர நம்பி வேலைய விட்டுபுட்டு வந்துட்டான்’ (அப்போது விருதுநகர் நாடார் கல்லூரியில் இயற்பியல் ஆசிரியர்) என்று சொன்னவர்களில் அவரது மனைவியும் அடங்குவார்.
அவரது மனைவியின் ஆண்குரல் குறைந்தபட்சம் 15 வீடுகளுக்காவது கேட்கும். ஆனால் அதே முத்தையா எம்.எல்,ஏ ஆகி வாடகைக்கு குடியிருந்த வீட்டை விலைக்கி வாங்கி அதை இரண்டு மாடி வீடாக மாற்றி அதன் பின்னர் கோடைரோடிலும் கொடைக்கானலிலும் நிலபுலன்கள் வாங்கிப் போட்டதும் அவரைப் போன்ற மதியூகி யாரும் இருக்க மாட்டார் எனப் பாராட்டப்பட்டார்.
எல்லாம் பணம்.
பா.ஜ.க.விடம் இரண்டு கோடி வாங்கி பாராளுமன்றத்தில் பா.ஜ.கவிற்கு எதிராக வாக்களிக்காமல் இருந்ததற்காக ஜெ வினால் தெருவில் வீசப்பட்டவுடன் “திருட்டுப் பய” என சொல்லப்பட்டு நேற்றுவரை அவரது வீட்டு வாசலில் பெஞ்சைத் தேய்த்தவர்கள் எல்லாம் ஓடிப்போனார்கள்.
அதிகாரம் இல்லாததால் அருகில் ஒருவரும் இல்லை.
பணம், அதிகாரம் இந்த இரண்டும் மட்டுமே இருந்தால் ஒருவனை அழகாகவும் இல்லையெனில் ஆபாசமாகவும் காட்டும்.